கவிதைகள்
ஒருமுறை கூப்பிட்டுவிடு… கவிதை… கண்மணி

பகலின் வெளிச்சமும் எனக்குப் பிடிப்பதில்லை,
இரவின் அமைதியும் என்னை ஆற்றுவதில்லை!
வீட்டின் ஒவ்வொரு சுவரிலும் மோதி மீள்கிறது,
குரல் இல்லாத இந்த மௌனம்!
காற்றின் திசையெல்லாம் உன் நியாபகங்கள்,
கைபேசி அழைக்கும்போதெல்லாம் ஒரு ஏக்கம்.. நீயா என்று !
மறுமுனையில் கேட்கப்போவது உன் குரல்தானா என்று?
இல்லை, ஏமாற்றத்தின் பெருமூச்சுதானா?
சாதாரணமாக நீ பேசினாலும் கவலையில்லை,
கொஞ்சலாய் நீ அழைத்தால் ஆயுள் கூடும்!
வார்த்தைகள் என்னவென்று எனக்கு முக்கியமில்லை,
உன் உதடு அசைந்தால் இந்த உலகம் நகரும்!
மழைக்காகக் காத்திருக்கும் நிலம்போல,
உன் மழைக் குரலுக்காக ஏங்கிக் கிடக்கிறேன்!
இப்பொது இங்கு மலை தான்…
ஆனால் என் நிலம் வறண்டு பொய் கிடக்குறது அம்மா….
ஒருமுறை கூப்பிட்டுவிடு “அப்பா ” என்று…
உறைந்து போன என் ஜீவன் உயிர் பெறட்டும்!
வறண்ட நிலம் ஈரமாக செழுப்பாகிவிடும் !!!
![]()