முச்சந்தி

சதாம் ஆட்சி வீழ்ந்த பின்னர் ஈராக்: ஜனநாயகம் வெற்றியா தோல்வியா? …  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(சதாம் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு அமெரிக்க தலைமையில் ஈராக்கில் மேற்குலக சார்பு ஆட்சி முலாம் பூசப்பட்ட ஜனநாயக அமைப்பு உருவாக்கப்பட்டது. இருபது ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதிக்குப் பிறகு, ஈராக்கில் ஜனநாயகம் வெற்றிபெற்றதா அல்லது தோல்வியடைந்ததா என்ற கேள்வி இன்னும் விவாதத்திற்குரியதாகவே உள்ளது. மதச் சமுதாய பிரிவுகளான சுனி, ஷியா பிரிவுகள் அரசியலை ஆழமாக பாதிக்கின்றன. ஊழல் அரசியல் மற்றும் நிர்வாகத்தில் பரவலான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அத்துடன் வெளிநாட்டு செல்வாக்கு தொடர்கிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் போன்ற நாடுகளின் அரசியல் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அத்துடன் நிர்வாக சேவைகள் பக்தாத்தில் குறைவாகவே இருக்கிறது)

2003 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் ஈராக் மீது படையெடுத்து, சதாம் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்தன. இந்த நடவடிக்கைக்கு வழங்கப்பட்ட முக்கிய காரணங்களில் ஒன்று, ஈராக் மக்களுக்கு ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதாகும். ஆனால் இருபது ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதிக்குப் பிறகு, ஈராகில் ஜனநாயகம் வெற்றிபெற்றதா அல்லது தோல்வியடைந்ததா என்ற கேள்வி இன்னும் விவாதத்திற்குரியதாகவே உள்ளது.

மேற்குலக ஆட்சி முலாம்:

சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் ஈராக் ஒரு அதிகாரமயமான அரசாக இருந்தது. அரசியல் எதிர்ப்புகள் கடுமையாக ஒடுக்கப்பட்டன. தேர்தல்கள் நடைபெற்றாலும் அவை உண்மையான ஜனநாயகப் போட்டிகளாக கருதப்படவில்லை. இந்த நிலையை மாற்றுவதாகக் கூறியே அமெரிக்கா தலையீடு செய்தது.

சதாம் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு அமெரிக்க தலைமையில் ஈராக்கில் மேற்குலக சார்பு ஆட்சி முலாம் பூசப்பட்ட ஜனநாயக அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தேர்தல் முறைமை உருவாக்கம் செய்யப்பட்டது. பல கட்சி தேர்தல்கள் நடைபெற வழிவகுக்கப்பட்டன. மக்கள் தொடர்ந்து வாக்களிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே ஈராக்கில் அரசியல் சுதந்திரம் உருவாகியது. முன்பு இருந்த கட்டுப்பாடுகளை விட ஊடகம், கட்சிகள் சுதந்திரமாக செயல்படுகின்றன. அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டதால் பல முறை அரசுகள் மாற்றப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்தின் ஒரு அடையாளம் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் அமைதி மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக பல ஆண்டுகளாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. 2000களில் இருந்து பல ஆண்டுகள் வன்முறை, குறிப்பாக ISIS எழுச்சி காரணமாக ஈராக் நாட்டை பாதித்தது.

ஆனாலும் மதச் சமுதாய பிரிவுகளான (Sectarianism) சுனி, ஷியா பிரிவுகள் அரசியலை ஆழமாக பாதிக்கின்றன. ஊழல் அரசியல் மற்றும் நிர்வாகத்தில் பரவலான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அத்துடன் வெளிநாட்டு செல்வாக்கு தொட்கிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் போன்ற நாடுகளின் அரசியல் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அத்துடன் நிர்வாக சேவைகள் குறைவாகவே இருக்கிறது. மின்சாரம், வேலைவாய்ப்பு, அடிப்படை சேவைகள் பல இடங்களில் குறைவாக இருக்கிறது.

இதனால் தற்போது ஈராகில் ஜனநாயகம் முழுமையான வெற்றி என்றோ முழுமையான தோல்வி என்றோ சொல்ல முடியாது. இது இன்னும் உருவாகிக் கொண்டிருக்கும், பல தடைகள் நிறைந்த அரசியல் முயற்சியாகும்.

சதாம் ஆட்சிக்கால பொருளாதாரம்

சதாம் ஹுசேன் ஆட்சிக்காலத்தில் (1979–2003) ஈராக் பொருளாதாரம் மிகுந்த மாற்றங்களையும் அதே நேரத்தில் கடுமையான சரிவுகளையும் சந்தித்தது. இது இரண்டு முக்கிய காலகட்டங்களாகப் பார்க்கப்படுகிறது. ஆரம்ப வளர்ச்சி காலம் மற்றும் பின்னர் தடைகள் – போர் காரணமான வீழ்ச்சி காலம். ஆரம்ப காலமாக 1970களின் இறுதி – 1980களின் தொடக்கம்்வரை சதாம் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றிய பிறகு, எண்ணெய் வருமானம் அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரம் விரைவாக வளர்ந்தது.

ஈராக் ஒரு எண்ணெய் சார்ந்த (oil-dependent) பொருளாதாரமாக இருந்தது. எண்ணெய் ஏற்றுமதி மூலம் அரசு அதிக வருமானம் பெற்றது. கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு (infrastructure) போன்ற துறைகளில் பெரிய முதலீடுகள் செய்யப்பட்டன. பல நகரங்கள் நவீனமயமாக்கப்பட்டன. இந்த காலத்தில் ஈராக் மத்திய கிழக்கில் ஒரு வளர்ந்து வரும் நாடு போலவே கருதப்பட்டது.

பின்னர்்ஈரான்–ஈராக் போர் 1980–1988 காலகட்டத்தில் இந்தப் போர் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. எண்ணெய் வருமானம் பெரும்பாலும் போருக்காக செலவானது. இதனால் வெளிநாட்டு கடன் அதிகரித்தது. நாட்டின் உள்கட்டமைப்பு சேதமடைந்தது.
வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி குறைந்தது. போரின் முடிவில் ஈராக் பெரும் கடன் சுமையுடன் இருந்தது.

குவைத் மீதான போரும் தடைகளும்:

1990களின் இறுதியில் குவைத்தை ஈராக் ஆக்கிரமித்ததால், சர்வதேச தடைகள் (UN sanctions) விதிக்கப்பட்டன. இதன் விளைவுகளாக ஈராக்கின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. மருந்து, உணவு, தொழில்நுட்ப பொருட்கள் கிடைப்பது குறைந்தது. பாரியளவில் பணவீக்கம் (inflation) அதிகரித்தது. மக்கள் வாழ்க்கைத் தரம் மிகக் குறைந்தது. கருப்பு சந்தை (black market) பெரிதாக வளர்ந்தது.


இதன் விளைவாக 1990களில் ஈராக் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னர் ஐ.நா. அனுமதியுடன் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஈராக் எண்ணெய் விற்பனை செய்யலாம்
ஆனால் வருவாய் உணவு, மருந்து போன்ற மனிதாபிமான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற (Oil for Food) திட்டம் உருவாகியது.
இது ஈராக்கிய மக்கள் பசி மற்றும் மருந்து பற்றாக்குறையை ஓரளவு குறைத்தது, ஆனால் பொருளாதாரத்தை மீண்டும் முழுமையாக மீட்டெடுக்கவில்லை.

சதாம் ஆட்சிக்கால பொருளாதாரம்

ஆரம்பத்தில் எண்ணெய் மூலம் ஈராக் வளர்ச்சி கண்டது. நடுவில் போர் காரணமாக வீழ்ச்சி அடைந்தது. இறுதியில் சர்வதேச தடைகளால் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டது. எனவே இது வளர்ச்சியும் அழிவும் இரண்டும் கலந்த ஒரு பொருளாதார ரீதியான பிரச்சினையாக இருந்தது. சதாம் கால ஈராக்கும் இன்றைய ஈராக் பொருளாதாரம் பற்றி ஒப்பீட்டளவில் பாரிய வேறுபாடுகளை காணலாம்.

சதாம் ஹுசேன் கால ஈராக் பொருளாதாரம் மற்றும் இன்றைய ஈராக் பொருளாதாரம் இரண்டும் எண்ணெய் சார்ந்ததுதான். ஆனால் நிலைத்தன்மை, வருமானம், மக்கள் வாழ்க்கைத் தரம் போன்றவற்றில் பெரிய வேறுபாடுகள் உள்ளன. சதாம் கால 1969–2003 ஆட்சியில்
மிக அதிகமாக அரசு கட்டுப்பாட்டில் எண்ணெய் பொருளாதாரம் இருந்தது.
தனியார் துறை மிகக் குறைவாக இருந்தது. ஈராக் அரசு தான் முக்கிய வேலைவாய்ப்பு வழங்குபவராக இருந்தது. அத்துடன் பொருளாதாரம் மையப்படுத்தப்பட்ட (centralized) அரச அமைப்பாக இருந்தது.

ஆனால் இன்றைய ஈராக்கில் எண்ணெய் உற்பத்தி தனியார் துறை வளர்ச்சி தொடங்கியுள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் (foreign investment) அஅதிகரித்துள்ளன. ஆனால் அரசியல் குழப்பம் காரணமாக வளர்ச்சி மந்தம் என்று கூறப்படுகிறது.
ஆனால் சதாம் காலத்தில் அதிக எண்ணெய் வருமானம் இருந்தாலும், போர் செலவுகள் (Iran–Iraq War, Gulf War) மற்றும் தடைகள் காரணமாக குறைந்தாகவே இருந்தது. இன்றைய ஈராக், உலக சந்தையில் எண்ணெய் விற்பனை அதிகம் செய்து வருகிறது.

ஆனால் ஊழல், அரசியல் குழப்பம், உள்கட்டமைப்பு குறைபாடு போன்ற காரணங்களால் வருமானம் குறைந்து உள்ளது. ஆனால் நிர்வாக சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது. மக்கள் வாழ்க்கைத் தரம் சதாம் காலத்தில் வளர்ச்சி அடைந்து இருந்தது. 1980க்கு முன் நல்ல கல்வி, சுகாதாரம் ஈராக்கில் இருந்து வந்தது.

ஆனால் 1990களின் பிற்பகுதியில் உணவு பற்றாக்குறை, மருந்து குறைவு, வறுமை அதிகரிப்பு ஏற்பட்டது. ஆனால் இன்றைய ஈராக்கில் கடுமையான வேலைவாய்ப்பு பிரச்சனை, மின்சாரம், தண்ணீர் சேவை சீர்கேடு மற்றும் பாதுகாப்பு சிக்கல் தொடர்கிறது. அரசியல் மற்றும் பொருளாதார தாக்கம் சதாம் காலத்தில் வலுவாக இருந்தது. ஒரே வலுவான ஆட்சியில் முடிவுகள் வேகமாக எடுக்கப்பட்டன.

ஆனால் போர் கொள்கைகள் பொருளாதாரத்தை அழித்தன என்பது உண்மைதான். இன்றைய ஈராக்கில் ஜனநாயக அரசு உள்ளது. ஆனால் பல அரசியல் கட்சிகள், பிரிவுகள் இருப்பதால்்முடிவுகள் மெதுவாக வருகின்றன. அத்துடன் ஊழல் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button