பலதும் பத்தும்

நுரையீரலை பாதிப்பது எது? காற்று மாசுபாடு அல்லது புகைப்பிடித்தல்.. மருத்துவ விளக்கம்

நுரையீரல் ஆரோக்கியத்திற்கு புகைப்பிடித்தல் அல்லது காற்று மாசுபாடு, இதில் எது அதிக தீங்கு விளைவிக்கும் என்பதை நிபுணர்களின் விளக்கத்துடன் அறிந்துகொள்ளலாம்.

நுரையீரலை பாதிப்பது எது? காற்று மாசுபாடு அல்லது புகைப்பிடித்தல்.. மருத்துவ விளக்கம் | What Harms The Lungs Air Pollution Or Smoking

நுரையீரலை பாதிப்பது எது?

காற்று மாசுபாடு ஒரு தீவிரமான சுகாதாரப் பிரச்சனையாகும். இது இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. நமது நுரையீரலை பாதுகாப்பது நமது கடமையாகும். 

காற்று மாசுபாடு அல்லது புகைப்பிடித்தல் இவை நுரையீரலை பாதிக்ககூடும். ஆனால் உது அதிகளவில் பாதிக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

இரண்டுமே நுரையீரலுக்கு  எவ்வாறான பாதிப்பை உண்டாக்கின்றன என்பதை நாம் பதிவில் மருத்துவ விளக்கத்தோடு பார்க்கலாம்.

நுரையீரலை பாதிப்பது எது? காற்று மாசுபாடு அல்லது புகைப்பிடித்தல்.. மருத்துவ விளக்கம் | What Harms The Lungs Air Pollution Or Smoking

புகைப்பிடித்தல்

சிகரெட் புகையில் 7,000-க்கும் மேற்பட்ட இரசாயனங்கள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அவற்றில் பல உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், சில புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. புகைப்பிடிக்கும் போது இந்த நச்சுப் பொருட்கள் நுரையீரலை நேரடியாக பாதித்து அதன் செயல்திறனை குறைக்கின்றன.

இதனால் சுவாசக் குழாய்களில் அழற்சி, சிஓபிடி, நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற கடுமையான சுவாச நோய்கள் ஏற்படும் அபாயம் நீண்டகால புகைப்பிடிப்பவர்களிடம் அதிகரிக்கிறது.

நுரையீரலை பாதிப்பது எது? காற்று மாசுபாடு அல்லது புகைப்பிடித்தல்.. மருத்துவ விளக்கம் | What Harms The Lungs Air Pollution Or Smoking

காற்று மாசுபாடு

ஆனாலும் காற்று மாசுபாட்டை சாதாரணமாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மாசடைந்த காற்றில் உள்ள PM2.5 மற்றும் PM10 போன்ற துகள்கள் இருக்கும். இது விஞ்ஙான ரீதியாக அறியப்பட்டவை.

இவற்றை நாம் சுவாசித்து  உள்ளிழுப்பதன் மூலம் அது நுரையீரலை அடைந்து அழற்சியை ஏற்படுத்தும்.

இது ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, ஒவ்வாமை மற்றும் நுரையீரல் செயல்பாடு குறைதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

நுரையீரலை பாதிப்பது எது? காற்று மாசுபாடு அல்லது புகைப்பிடித்தல்.. மருத்துவ விளக்கம் | What Harms The Lungs Air Pollution Or Smoking

எதன் தாக்கம் அதிகம்?

காற்று மாசுபாடு மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பின் அளவும் கால அளவும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால், இரண்டையும் நேரடியாக ஒப்பிடுவது பொருத்தமற்றது என்று மருத்துவர் கூறுகிறார்.

ஒருவர் தொடர்ந்து புகைப்பிடிப்பவராக இருந்தால், புகைப்பிடிப்பதால் அவருக்கு ஏற்படும் ஆபத்து பொதுவாக அதிகமாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், புகைப்பிடிக்காதவர்கள் கூட அதிக மாசுபாடுள்ள பகுதிகளில் வசித்தால், கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம் எனப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button