இலங்கை

ஜனாதிபதியாகும் தகுதி எனக்குள்ளது; விமல் வீரவன்ச தெரிவிப்பு

2029ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் தன்னால் ஜனாதிபதியாக முடியும் எனவும், அதற்கான தகுதி தனக்கு உள்ளது என்றும் தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது வீரவன்ச மேலும் தெரிவிக்கையில்,

2029ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் என்னாலும் ஜனாதிபதியாக முடியும். இந்த உயர் பதவிக்கு வருவதற்குத் தேவையான அனைத்து தகுதிகளையும் நான் பூர்த்தி செய்துள்ளேன். எவ்வாறாயினும், என்னை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுப்பது குறித்த இறுதி முடிவை நாட்டு மக்களே எடுக்க வேண்டும்

இதேவேளை இந்த அரசாங்கத்தினால் பொருளாதாரத்தை கொண்டு செல்ல முடியாது. இந்த அரசாங்கம் ரணில் சென்ற பாதையிலேயே போகின்றது. அடுத்து ஆட்சிக்கு வருபவரும் ரணில் விக்ரமசிங்க பின்பற்றிய அதே பொருளாதாரப் பாதையில் செல்பவராக இருக்கக் கூடாது. மாறாக, புதியதொரு மாற்று அரசியல் மற்றும் பொருளாதாரப் பாதையை நோக்கி நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரு தலைவரே இலங்கைக்குத் தேவையாக உள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button