கவிதைகள்
ஆனந்தம் பொங்கிப் பெருகியது…. கவிதை…. ஜெயராமசர்மா

அக்கினிக்குஞ்சு இசை அருவி
ஆட்டம் பாட்டு கொண்டாட்டம்
அரங்கு நிறைந்த ரசிகர்கூட்டம்
ஆனந்தம் பொங்கிப் பெருகியது
ஈழம் தமிழகம் இணைந்தவிசை
இளையோர் முதியோர் இணைந்தார்கள்
குளிரும் பசியும் பறந்தோட
குதூகலம் எழுந்து நின்றதங்கே
ஆளுமை பலருக்கு விருதளித்து
அக்கினிக் குஞ்சு கெளரவித்து
வாழும் கலைஞர் வளர்கவென
வாழ்த்திய பாஸ்கரை வாழ்த்துகிறேன்
அக்கினிக் குஞ்சு மின்னிதழாய்
அகமெலாம் அமர்ந்தே இருக்கிறது
பதினாறாம் ஆண்டில் பாஸ்கரினால்
பலரும் வாழ்த்திட மிளிர்கிறது !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()