இந்தியா

தவெக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லையா?; குழப்பத்தை ஏற்படுத்திய தலைவர்

தவெக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியாக இருக்கின்றதா என்பதை குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் வீரபாண்டியன் பேசியுள்ளது குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மாநில தலைவர் வீரபாண்டியன்

தமிழக வெற்றி கழகம் மாபெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சி அமைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது 2 தொகுதியினை தவெக-விற்கு அளித்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தி தனது பதிவில், தமிழ்நாடு சமூக நீதி முன்போக்கு கூட்டணியின் சார்பின் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.

அதாவது அக்கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரவீன் சக்ரவர்த்தி கூறியிருந்தது தவறானது என்றும் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி குறித்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதுவும் தெரியாது.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சி அமைக்கவே இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்துள்ளது.

அதுமட்டுமின்றி ஆளுநர் ஆட்சி அல்லது மறைமுகமான பாஜக ஆட்சி அமைந்துவிடக்கூடாது, மத்திய அரசின் சதி திட்டத்திற்கு தமிழ்நாட்டில் வாய்ப்பளிக்கக்கூடாது என்று அடிப்படையில் தான் ஆதரவு அளித்ததாகவும், பிரவீன் சக்ரவர்த்தி கூறுவது போன்று கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை என்று தெளிவு படுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button