பலதும் பத்தும்

இரவு நேரத்தில் மாம்பழம் சாப்பிடுகிறீர்களா?…

முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

காரணம், மாம்பழம் மிகவும் சுவையானது மட்டுமின்றி அதிக சத்துக்கள் நிறைந்ததும் கூட. ஆனால், இரவு நேரங்களில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனும் கருத்தும் நிலவுகின்றது.

இரவு நேரத்தில் மாம்பழம் சாப்பிடுகிறீர்களா?... அப்போ இதை படியுங்கள் | Eating Mangoes At Night Read This Health Advice

அதற்கான காரணங்கள்

 

அதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம். இயற்கையாகவே உடல் ஆற்றலை அதிகரிக்கக்கூடியது மாம்பழம்.

எனவே மாம்பழத்தை இரவு நேரங்களில் சாப்பிடும்பொழுது உடல் ஓய்வு பெற முடியாமல் உறக்கத்தின் தரம் குறையும்.

இனிப்பான மாம்பழத்தை இரவில் சாப்பிடும்பொழுது சமிபாட்டு பிரச்சினை ஏற்படுவதோடு, வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

இரவு நேரங்களில் மாம்பழம் சாப்பிடும்பொழுது கலோரிகள் எரிக்கப்படாமல் சேமிக்கப்படும்.

இரவு நேரங்களில் மாம்பழம் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை உயர்வு, எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button