டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு!

இந்திய தலைநகர் டெல்லி உணவகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
மேலும் சிலர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள உணவகத்தின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் சிக்கியிருந்தவர்களை மீட்டுள்ளனர்.
அத்துடன் கட்டடத்திற்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் நிலவி வருவதால் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன .
காயம் அடைந்த 37 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, மேலும் 11 பேர் மீட்கப்பட்டனர்.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காணும் பணி இடம்பெற்று வருகிறது.
விபத்திற்கான விசாரணை இடம்பெற்றுவருவதுடன் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என தெரியவந்துள்ளது.
![]()