பலதும் பத்தும்

கால்​பந்து ஜாம்​ப​வான் மெஸ்ஸியின் 70 அடி சிலை அகற்றம்

உலகப் புகழ்​பெற்ற கால்​பந்து ஜாம்​ப​வான் லயோனல் மெஸ்ஸி​யின் 70 அடி உயர பிரம்​மாண்ட சிலை நேற்று மேற்கு வங்​கத் தலைநகர் கொல்​கத்​தா​வின் லேக்டவுன் பகு​தி​யில் இருந்து , அகற்​றப்​பட்​டது.

கடந்த சில நாட்​களாக வீசிய பலத்த காற்​றின்​போது, இரும்பு மற்றும் ஃபைபர் கிளாஸ் கொண்டு செய்​யப்​பட்ட இந்த மாபெரும் சிலை பலமாக ஆடி​யுள்​ளது. இதனால், வரவிருக்​கும் பரு​வ​மழைக் காலத்​தில் பொது​மக்​களுக்கு ஆபத்து ஏற்​படலாம் என அப்​பகுதி மக்​கள் தொடர்ந்து புகார்​களை அளித்து வந்​தனர்.

இதனைத் தொடர்ந்​து, பொதுப்​பணித்​துறை அதி​காரி​கள் நேற்று அதி​காலை விஐபி சாலை பகு​தி​யில் உள்ள சுரங்​கப்​பாதை பாத​சாரி நடை​பாதை மேலே அமைக்​கப்​பட்​டிருந்த இந்த பிரம்​மாண்ட சிலையை, ஹைட்​ராலிக் கிரேன்​கள் மற்​றும் பொறி​யாளர்​கள் குழு​வின் உதவி​யுடன் பாது​காப்​பாகப் பிரித்து அகற்​றினர்.

அர்​ஜென்​டினா அணி​யின் நட்​சத்​திர ஆட்​டக்​காரர் மெஸ்​ஸி, 2022 ஃபிஃபா உலகக் கோப்​பையை ஏந்தி நிற்​பது போல இந்​தச் சிலை வடிவ​மைக்​கப்​பட்​டிருந்​தது. கடந்த 2025 டிசம்​பரில் மெஸ்​ஸி​யின் இந்​தி​யப் பயணத்​தின்​போது இந்​தச் சிலை திறந்து வைக்​கப்​பட்​டது.

அப்​பயணத்​தின் போது மைதானத்​தில் ஏற்​பட்ட நிர்​வாகக் குறை​பாடு​கள் மற்​றும் வன்​முறைச் சம்​பவங்​கள் பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button