தமிழீழ விடுதலைப் புலிகளை சீண்டும் இனவாத தரப்பு: கொழும்பில் நடத்திய பாதுகாப்பு மாநாடு!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாக்கத்தில் அவர்களின் களம் மாறுப்பட்டுள்ளது என இலங்கை புவிசார் அரசியல் (geopolitics) வெளிநாட்டுக் கொள்கை ( foreign policy) மற்றும் சர்வதேச உறவுகள் ஆகிய துறைகளில் நிபுணரான அசங்க அபேகுணசேக்கர தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்துரையாற்றிய அவர்
பயங்கரவாதம் இன்னும் முடிவடையவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ரீதியிலான தலைவர்கள் இருக்கிறார்கள். பெயரைக் குறிப்பிட்டுக் கூறினால் நோர்வேயில் (Norway) இருந்து ‘நெடியன்’ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை வழிநடத்துகிறார்.
அடுத்ததாக பிரான்ஸில் (France) இருந்து ‘விநாயகம்’ ஆயுதமேந்திய புலனாய்வுப் பிரிவை வழிநடத்துகிறார்.
இந்தியாவில் இருந்து ‘சிரஞ்சீவி மாஸ்டர்’ என்ற பெயரில் ஒருவர் செயற்பட்டு வருகிறார். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் வந்து செல்ல அரை மணித்தியாலம் மட்டுமே ஆகும்.
தற்போது அவர்கள் தங்களது களத்தை மாற்றியுள்ளனர். ஏனெனில் இலங்கைக்குள் செயற்படுவதை எதிர்காலத்திற்கு பாரப்படுத்தியுள்ளனர்.
மறைமுக செயற்பாடுகள்
நாங்கள் பயங்கரவாதத்தை 2009 மே மாதத்தில் இந்த நாட்டில் இருந்து முற்றாக ஒழித்த போதிலும் அதன் பின்னர் புனர்வாழ்வு பெற்றும் பெறாமலும் தப்பியோடிய அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் இதனை அமைப்பாக்கவுள்னர்.
ஆயுதமேந்திய புலனாய்வு மற்றும் அரசியல் பிரிவுகளாக தனித்தனியாகச் செயற்பட்டு நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றத் தயாராகி வருகின்றனர்.
அரசியல் ரீதியாக ருத்ரகுமரன் – அருட்தந்தை இம்மானுவேல் – சுரேன் சுரேந்திரன் உள்ளிட்ட குழுவினர் செயற்பட்டு வருகின்றனர்.
அவர்களிடமே நாட்டின் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் பலம் உள்ளது. அவர்களிடமே பணம் இருக்கிறது. அந்தப் பணம் அனைத்தையும் நிர்வாகம் செய்வது நெடியவன் ஆகும்.
சமீபத்தில் முக்கிய நபர்கள் சிலர் சென்று இவர்களை சந்தித்து அங்கு எட்டப்பட்ட உடன்பாடுகளின்படிதான் இன்று எமது இராணுவத்தினருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அவர்களை திருப்திப்படுத்துவதற்காகவே இது செய்யப்படுகிறது. அவர்கள் ஒருபோதும் ‘தனி நாடு’ என்ற கொள்கைக்கு அப்பால் செல்வதில்லை.
அவர்கள் இந்த தனி நாட்டுக் கொள்கையை இந்த மண்ணில் செயல்படுத்துவதற்காகவே போராடுகிறார்கள். எனவே நாம் சுதந்திரமாக வாழ வேண்டுமானால் அதற்கு எதிராக போராட வேண்டும்.
![]()