இலங்கை

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி, ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த மனு மீதான இறுதி வாய்மொழி சமர்ப்பணங்கள் மற்றும் வாதப் பிரதிவாதங்கள் தொடர்பான விசாரணைகள் அனைத்தும் நேற்று (02) நிறைவடைந்தது.

மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தரப்பு வாதங்களை முழுமையாகக் கேட்டறிந்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான தனது இறுதித் தீர்ப்பை அறிவிப்பதை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தீர்ப்பு வழங்கப்படும் உத்தியோகபூர்வ திகதி நீதிமன்றத்தினால் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button