யாழ். பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடு சேதமாக்கப்பட்டது விசமத்தனமான செயலா?

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்கார கூடு சேதமாக்கப்பட்ட சம்பவமானது விசமத்தனமான செயற்பாடா? என்பது தொடர்பில் பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் ஆராய்வதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வெசாக் பூரணையையொட்டி யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் நிர்மாணிக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரக் கூடு இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸார் இது தொடர்பில் விளக்கங்களை எனக்கு வழங்கியிருக்கவில்லை. ஆனால் அது தொடர்பில் நான் சமூக வலைத்தளங்களில் பார்வையிட்டேன். நான் பார்த்த வரையில் அங்கு குறித்த மாணவர் சங்கத்தை தமிழ் இளைஞர்களே பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அவர்களே வெசாக் கூட்டை நிர்மாணித்துள்ளனர். இந்நிலையில் இங்கு நடந்துள்ள சம்பவம் ஏதேனும் வகையில் விசமத்தனமான செயற்பாடா என்பது தொடர்பில் பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் ஆராய்ந்து அறிக்கைகளை முன்வைப்பர். அதன்பின்னர் இது தொடர்பில் கூறுவோம் என்றார்.
![]()