இலங்கை

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில், கொழும்பு கோட்டை பகுதியில் ‘கிரிஷ்’ சதுக்கத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியை அடிப்படையாகக் கொண்டு, முறைகேடான முறையில் நிதி கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட சிலருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான ஆரம்பகட்ட வழக்கு விசாரணைக்கு முந்தைய மாநாடு நிறைவுற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்தே, இந்த வழக்கின் பிரதான விசாரணையை ஜூலை மாதம் 7ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button