உலகம்
ட்ரம்ப்பின் நிதி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

அமெரிக்காவில் அரசு இயந்திரத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்காக அதிபா் டொனால்ட் ட்ரம்ப் நிா்வாகத்தால் உருவாக்கப்பட்ட 177.6 கோடி டாலா் நிதியிலிருந்து பணம் வழங்க அந்நாட்டு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.
டிரம்ப்பின் வரி ஆவணங்கள் கசிந்தது தொடா்பான வழக்கைத் திரும்பப் பெற்ற்காக எட்டப்பட்ட சமரச ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்நிதி உருவாக்கப்பட்டது.
இந்நிதியால் பெரும்பாலும் ட்ரம்ப்பின் அரசியல் ஆதரவாளா்களே பயனடைவா் எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வா்ஜீனியாவின் அலெக்ஸாண்டிரியாவில் உள்ள மாவட்ட நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 12-இல் நடைபெறுகிறது.
![]()