இந்தியா

சோனியா, ராகுலுடனான சந்திப்பு ரத்து!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரண்டு நாள் பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குச் சென்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டார்.

டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்க்கு, பூங்கொத்து கொடுத்து அதிகாரிகள் வரவேற்றனர். மேலும், பொலிஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்த பிறகு முதலமைச்சர் விஜய் நேற்று மாலை 4.30 மணியளவில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து, மாலை 6.30 மணியளவில் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.

தமிழ்நாட்டிற்கான நிதி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார்.

இந்நிலையில், திட்டப்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க இருந்தார்.

அதற்காக, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில் தற்போது அது ரத்தாகி உள்ளது.

முதலமைச்சர் விஜய் அவசரமாக சென்னை திரும்புவதால் சந்திப்பு ரத்து எனக் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாடு புறப்பட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button