பலதும் பத்தும்

விராட் கோலி ரசிகர்களால் Online Abuse!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட்டுக்கு ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு ஆர்சிபி ரசிகர்கள் டிராவிஸ் ஹெட்டின் மனைவியை சமூகவலைதளங்களில் திட்டிவருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி மற்றும் எஸ்ஆர்எச் போட்டியில் கோலிக்கும் டிராவிஸ் ஹெட் வாய்த்தகராறு, பின்னர் கைகுலுக்க மறுப்பு வரை விவகாரம் தீவிரமானது.

இதைத் தொடர்ந்து ஆர்சிபி ரசிகர்கள் ஹெட்டின் மனைவியை சமூக வலைதளங்களில் கடுமையாக திட்டி, குடும்பத்தினரையும் குறிவைத்து தாக்கியதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். வீரர்களும் மனிதர்கள், அவர்களுக்கும் குடும்பம் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.

ஆர்சிபி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டு விளையாடியது. முதலில் துடுப்பெடுத்தாடிய SRH அணி 255 ஓட்டங்களை குவித்த நிலையில், ஆர்சிபி அணி 200 ஓட்டங்களை மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இந்தப்போட்டியில் ஆர்சிபி துடுப்பெடுத்தாடும் போது விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இடையே மோதல் வெடித்தது. போட்டி முடிந்தபிறகு கூட டிராவிஸ் ஹெட் உடன் கைக்குலுக்க விராட் கோலி மறுத்துவிட்டார்.

இவ்விவகாரத்தில் டிராவிஸ் ஹெட் மீதுதான் தவறு இருப்பதாகவும், என்ன இருந்தாலும் விராட் கோலி கைக்கொடுத்திருக்க வேண்டும் என்றும் இருவேறு தரப்பினர் கருத்திட்டு வருகின்றனர். ஆனால் இதுஒருபுறம் இருக்கு விராட் கோலி மற்றும் ஆர்சிபி ரசிகர்களால் டிராவிஸ் ஹெட் மனைவி இணையத்தில் கடுமையாக வசைப்பாடப்படுவதாகவும், தங்கள் குடும்பத்தினர் குறிவைத்து தாக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்து இருக்கும் அவர்,

“இந்தியாவிற்கு எதிரான உலகக் கிண்ண வெற்றிக்குப் பிறகு நடந்த வசைமொழிகளின் மறுபதிப்பு போல இதை உணர்கிறேன். நான் எழுந்தபோது என் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் குவிந்திருந்தன. நாங்கள் நலமாகவே இருக்கிறோம், ஆனால் அவர்கள் என் நண்பர்களையும் குடும்பத்தினரையும் தாக்குகிறார்கள். தற்போது அனைத்து விளையாட்டுகளிலும் ஒருவருக்கொருவர் பேசும் விதம் குறித்து ஒரு முக்கியமான உரையாடல் நடைபெறுகிறது என்று நான் நினைக்கிறேன். விளையாட்டில் உங்களுக்கு மிகப்பெரிய ஆர்வம் இருந்தாலும், இந்த விளையாட்டுக்குப் பின்னால் வீரர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் குடும்பங்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்வது முக்கியம். இது ஒருவருக்கொருவர் அதிக அன்பையும் ஆதரவையும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button