காசும் அரசியல் தலைமைத்துவப் பேராசையும்… ஏலையா க.முருகதாசன்

அண்மை நாட்களாக இலங்கையின் மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து ஒருசில காசாளர்களும், தொழிலதிபர்களும் தாங்களும் வட மாகான சபைக்கு முதல்வராக வரவேண்டுமென்பதற்காக பல்வேறு செயல்திட்டங்களைச் செய்து வருவதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது.
அரசியல் பற்றிய அறிவிலும்,அதுசார்ந்த சிந்தனையிலும்; ஒட்டுமொத்த மக்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல.
ஒரு கட்சிக்கு ஆதரவளிப்பவர்களைப் பார்க்கும் போது வேறு வேறு காரணங்களுக்காகவே ஆதரவளிப்பவர்களாக இருப்பபார்கள்.
கட்சியை நடத்துபவர்கள்,கட்சியின் கொள்கை,தாம் அதரவளிக்கும் கட்சிக்கு எதிராகப் போட்டியிடுபவர் யார் என்ன ஆள் என்ற பார்வை ஆதரவளிப்பவர் தேர்தலில் போட்டியிடுபவர் தனது நட்பு வட்டத்தை அல்லது உறவு வட்டத்தைச் சேர்ந்தவர் என்ற பலவித காரணங்களை வைத்து,இவ்வாறாக பல பிரிவுச் சிந்தனையுள்ளவர்கள் இருப்பார்கள்.
ஆதரவளிப்பவர்களில் ஒரு தொகையினர்,கட்சியின் கொள்கை;காகவோ,அந்தக் கொள்கை சாத்தியப்படுமா சாத்தியப்படாத என்பதைக்கூட ஆராயமாட்டார்கள்.
ஒரு சமூகத்தில் அறிவாற்றலிலும் ஆய்வு ரீதியான கணிப்பீடுகளைச் செய்வதிலும் பலவடுக்கு மனிதர்களிருப்பார்கள்.இவர்களைச் சாதாரண மனிதர்களிலிருந்து துறைசார் விற்பன்னர்கள் வரை வகைப்படுத்தலாம்,பிரித்தும் பார்க்கலாம்.
மற்ற எல்லாத் துறைகளையும்விட அரசியல்துறை என்பது சாதாரண மனிதர்கள் தொடங்கி அத்துறைசார் அறிவியலாளர்கள் வரை அனைவரையும் உட்படுத்தி தழுவி நிற்கும் துறையாகும்.;இயற்பியல் சார்ந்த புவியீர்ப்பு சம்பந்தப்பட்ட அறிதலில் ஒரு குறிப்பிட்ட காலம்வரை மனிதகுலத்துக்கு பூமிக்கு தன்னோடு பூமியிலுள்ள அத்தனையையும் ஈர்ப்புச் சக்தி மூலம் இழுத்து வைத்திருக்கும் சக்தி உண்டா என்பதே தெரியாது.
ஐசாக் நியூட்டன் அப்பிள் பழம் மரத்திலிருந்து மேல்நோக்கிப் போகாமல் ஏன் கீழே விழுகின்றது என்பதை தீவிரமாகச் சிந்தித்து பல கட்டங்களாக ஆய்வு செய்ததன் பின்பே பூமிக்கு ஈர்ப்பு விசை இருக்கின்றது அதனாலேயே உயிரினங்கள் உட்பட அனைத்தும் பூமியைவிட்டுப் பறக்காமல் பூமியுடனேயே இருக்கின்றன என்பது தெளிவாக்கப்பட்டது.(கிரேக்க தத்துவஞானியான சாக்கிரட்டீஸின் மாணவனான தத்துவார்தவரான அரிஸ்டாட்டில் கிறீஸ்துவக்கு முன் 330 ஆண்டளவில் பொருட்களின் நியையைப் பொறுத்து பூமியில் விழுகின்றன என்று சொன்னாரே தவிர ஐசாக் நியூட்டன் போல் பூமியின் ஈர்ப்பு விசையினால்தான் விழுகின்றன என்று தீர்க்கமான விடையைக் கண்டுபிடிக்கவில்லை)
ஆனால் புவியீர்ப்பு விசையின் மூலக்கூறுகள் சாதாரண மனிதர்கள் தொடங்கி கல்வியாளர்கள் எனவும்,அதனை மேலும் மேலும் அதபற்றிய ஆய்வை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற விஞ்ஞானிகள் வரை அறிதலின் நுண்ணறிவுப் பரப்பளவின் விஸதீரணம் வேறுபட்டிருக்கும்.
ஒரு நாடு என்றால் அங்கு வாழும் மக்களின் தேவைகள் பலவாக இருக்கும்.ஒவ்வொரு தனிமனிதனோடும் விவசாயம்,உணவு வணிகம்,கல்வி,மருத்துவம்,கலை வெளிப்பாடுகள்,மொழிசார் வெளிப்பாடுகள்,தொழில்துறை,,போக்குவரத்து எனப் பெரும் பிரிவுகளும்,ஒவ்வொரு பெரும் பிரிவுகளுக்குள்ளும் பலநூறு கிளைப் பிரிவுகளும் உண்டு.
இவை அனைத்;தையும் ஒவ்வொரு தனிமனிதனும் அந்தந்தக் காலங்களில் தேவைப்படும் போது அதை அனுபவிப்பதற்கான உரிமையைக் கொடுப்பதே ஒரு நாட்டரசின் நிர்வாகச் செயலாகும்.

சிறப்பான நிர்வகித்தல் மூலமாக ஒவ்வொரு தனிமனிதனையும் பராமரிப்பதாகும்.இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் ஒரு அரசின் பெரும் அக்கறை ஒரு நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமர் தொட்டு அதில் பல்வேறு துறைக்கட்டமைப்புகளுக்காக அங்கம் வகிக்கும் அமைசசர்கள் வரை இருந்தேயாகவேண்டும்.
எனவே எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் அரசியலாகும்.அரசியல்வாதிகள் என்பவர்கள் நாடாளுமன்றத்திலும்,அல்லது உப சபைகளிலும் ஆரவாரமாக ஒருவருக்கொருவர் புறணி பேசுபவர்கள் அல்ல.
இன்று இலங்கையில் ஒரு புதிய அலை எழுந்துள்ளது.தம்மையும் அரசியலாளர்கள் என நினைத்துக் கொண்டு சில வணிகர்களும் தொழிலதிபர்களும் தாம் மற்றவர்களின் கவனத்திற்குட்டபட்டவர்களாக இருக்கின்றோம் எனவே இலங்கையின் மாகாண சபைகளில் முதலமைச்சராகவும் இருந்துவிட வேண்டும் என்ற காய்நகர்த்தலில் ஈடுபடுவதை அறிய முடிகின்றது.
தாம் பல நாடுகளில் பெரும் சாதனைகளைப் புரிந்தவர்கள் என அப்பப் ஊடகங்களில்; சொல்லாமல் சொல்லி வருகிறார்கள்.(இதனை சொல்லி வருகிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் சொல்லி வருகிறார் எனவும் வாசிப்பவர்கள் உள்வாங்கிக் கொள்ளலாம்).
மேலே அரசியலாளர்கள் என்றால் எத்தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும் என்பதைச்சுட்டிக்காட்டியுளளேன்.;.
துறைசார் கட்டமைப்புகளின் வழியாக மக்களுக்கான சேவையை நடைமுறைப்படுத்தி வரும் அதிகாரிகளின் அலட்சியங்களால் எற்படும் தாமதங்களுக்கு பொயக் காரணங்களைக் கூறும்போது அது பொய்க்காரணங்கள் என்பதைச் சொல்லும் நுண்ணறிவுத்துணிவு ஒரு முதலமைச்சருக்கு இருக்க வேண்டும்.
அதற்குத்துறைசார் அறிவு பொதறிவாக ஒரு முதலமைச்சருக்கு இருப்பது மிக முக்கியம். மிகத் ;.துணிவு என்பது துறைசார் அறிதலின் நுண்ணறிவின் மூலமே வரும்.
ஒரு நாட்டில் நாட்டை ஆளும் தலைமைத்துவம் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ அதற்கடுத்த நிலையாக மாகாண முறைமையில் முதலமைச்சராக இருந்தாலோ,இவர்கள்பற்றிய அறிவுசார் அபிப்பிராயம் அமைச்சர்களுக்கோ அதிகாரிகளுக்கோ இளக்காரமானதாக இருக்கவேகூடாது.
ஒரு திட்டத்தை முடிப்பதில் சிரமமிருக்கின்றது என்று ஒரு அமைச்சரோ அதிகாரியோ சொல்வாரானால் ஏன் அது முடியாது என்று கேள்வி கேட்டு முடிக்குமாலோசனையை வழங்கும் புத்திஜீவியே தலைமைப் பொறுப்பிலிருக்க வேண்டும்.
தன்னிடம் பணம் இருக்கின்றது,நான் ஒரு தொழிலதிபர்,நான் அந்த நாட்டில் அதைச் செய்து காட்டினேன் இந்த நாட்டில் இதைச் செய்தேன் என ஊடகங்களில் பேட்டி கொடுப்பதன் மூலம் அவர் அரசியல்சார் தலைமைதாங்கும் தகுதியுடையவர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.
இன்னும், அதைவிட நீண்டநெடுங்காலமாக போர்ச்சூழலிலும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும்,அதன்பெறுபேறாக பொருளாதார நெருக்கடிக்குள்ளும் வாழ்ந்த,வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிடமிருந்தே வட மாகாண முதலமைச்சர் தெரிவு இடம்பெற வேண்டும்.
வெளிநாடுகளில் வாழுகின்ற வணிகர்களும்,தொழிலதிபர்களும் வட கிழக்கு மக்களுக்கு அரசியல் தலைமைதாங்க வேண்டுமென்ற நிலையில் மக்களில்லை.
வடகிழக்கில் வாழுகின்ற மக்களின் சராசரி கல்வியறிவு பாடசாலையின் உயர்தரக் கல்வியறிவாகும்,அதையும்விட அங்குள்ள இளம்தலைமுறையினர் பெரும் அறிவுஜீவிகள்.

அங்குள்ள மக்களிடமிருந்து பட்டப்படிப்பில் கணிதம், பொருளாதாரம், அரசியல்,தர்க்கவியல், தத்துவம் ஆங்கிலம், சிங்களம்,விஞ்ஞானப் பாடங்களில் மேன்மைச் சித்தியடைந்த இளைஞன் ஒருவனே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
வணிகர்கள் அல்லது தொழிலதிபர்கள் தமக்கெதிரான சாதக பாதகச் சூழ்நிலைகளினூடாக, அதனைத் தமது முதலமைச்சர் அபிலாசைக்கான தூண்டிலாக பளன்படுத்த முயல்வது பதவிமீதான பேராசையாகத்தான் முடிவெடுக்க வேண்டும்.
வணிகர்களும்,தொழிலதிபர்களும் சமூகத்திற்கு மிகத் தேவையானவர்கள்தான்.அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.ஆனால் அரசியல் என்பது முற்றிலும் வேறு.
கடந்தகாலத்தில் நீதித்துறையைச் சேர்ந்த ஒருவரைத் தெரிவு செய்யம் போது எடுத்த கற்பனை முடிவு போல இனிவருங்காலங்களில் தவறான முடிவுகளை எடுக்காதிருக்க வட கிழக்கு மக்கள்தான் வழிப்புடன் இருக்க வேண்டும்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் எத்தகுதியுடையவர்களாக இருந்தாலும் அவர்கள் தாயக மக்களுக்கு தலைமைதாங்கம் தகுதியற்றவர்களே.வடகிழக்கு மக்கள் கிள்ளுக்கீரைகளல்ல.
![]()