உலகம்

எபோலா பரவல் தடுப்பு – கனடாவில் புதிய கட்டுப்பாடுகள்!

எபோலா பாதிப்புள்ள பிராந்தியங்களில் இருந்து வரும் பயணிகள் 21 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், காங்கோ, தெற்கு சூடான் மற்றும் உகாண்டாவில் இருந்து வரும் விண்ணப்பங்கள் மீதான முடிவுகளை குடிவரவு அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் என்றும் கனடா அரசாங்கம் அறிவித்தது.

கனடாவின் பொது சுகாதார முகமையின் எல்லை மற்றும் பயண சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர் லூக் பிரிஸ்பாய்ஸ், இந்த நடவடிக்கைகள் “மிகுந்த முன்னெச்சரிக்கையாக” செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வருகிற ஆகஸ்ட் 29 ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அறிகுறிகள் உள்ள பயணிகள் மேலதிக வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

சனிக்கிழமை முதல் கடுமையான எல்லை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன, மேலும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள இடவசதி இல்லாதவர்களுக்கு இடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை முதல், பாதிக்கப்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களின் குடிவரவு விண்ணப்பங்கள் மீதான இறுதி முடிவுகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக கனடிய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இருப்பினும், நோய்ப் பரவலின் போக்கைப் பொறுத்து இந்த இடைநிறுத்தம் நீட்டிக்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button