இலங்கை

NPP – JVPக்குள் கடும் குழப்பமா! அநுர எடுத்த அதிரடி முடிவு

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜெயதிஸ்ஸ கூறிய கருத்துக்கள் பல அரசியல் சந்தேகங்களுக்கு முற்றுப் புள்ளியை வைத்துள்ளது.

அதாவது பொதுமக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மக்கள் ஆணைக்கு எதிராக கட்சி தாவுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை உடனடியாக ரத்து செய்வதற்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று நளிந்த ஜெயதிஸ்ஸ அறிவித்திருந்தார்.

மேலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எவரையும் ஆளும் கட்சியில் சேர்த்துக்கொள்ள அரசுக்குத் திட்டமில்லை என்று கூறினார்.

சில தரப்பினரின் விருப்பங்கள் இருந்தபோதிலும், அரசு அவ்வாறு செய்யத் தயாராக இல்லை என்றும், மக்களிடமிருந்து தெளிவான ஆணை கிடைத்துள்ளதாகவும், அதற்கேற்ப செயல்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button