இலங்கை

புதிய ஜனாதிபதியாவதில் கடும் போட்டி..! உச்சம் தொடும் நெருக்கடிகள்

நாட்டில் இன்றையதினம் பரபரப்பான பல சம்பவங்கள் பதிவாகி இருந்தன.

அதில் நாட்டை வழிநடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தால், “இன்றே நாட்டைப் பொறுப்பேற்கத் தான் தயாராக இருப்பதாக” சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்திருந்தார்.

முடிந்தால் தேர்தல் ஒன்றை நடத்திப் பாருங்கள், மக்களின் ஆதரவு உங்களுக்கு எந்தளவுக்கு உள்ளது என்பது அப்போது தெரியும் என்றும் நாமல் ராஜபக்ச மற்றொரு பக்கம் சவால் விடுத்திருந்தார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டமையும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

போர் வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த வேளை கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button