உலகம்

அணு ஆயுதம் உருவாக்கமாட்டோம் – மீண்டும் உறுதியளித்த ஈரான்

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என ஜனாதிபதி Masoud Pezeshkian உலக நாடுகளுக்கு மீண்டும் உறுதியளித்துள்ளார்.

இந்த உறுதியை நடைமுறைப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராகவும் திறந்த மனதுடனும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அணுசக்தி தொடர்பான விவகாரத்தில் உடனடி முடிவுகள் அல்லாமல், படிப்படியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஈரான் உள்ளது. தற்போது அனைத்து தரப்பினரின் கவனமும், குறிப்பாக தெற்கு லெபனானில் நடைபெறும் இஸ்ரேல் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை எட்டுவதிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்விவகாரத்தில் ஈரான் தரப்பில் இருந்து வெளியாகும் புதிய கருத்துக்கள் இவையாகும்.

பேச்சுவார்த்தைகளில் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்றாக அணுசக்தி விவகாரம் தொடர்கிறது. அதனுடன், ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளை மீட்பது போன்ற பிரச்சினைகளும் முக்கிய முட்டுக்கட்டைகளாக உள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button