இலங்கை

தலதா மாளிகையின் அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இந்திய விமானப் படைத் தளபதியை ட்ரோன் கமரா மூலம் படமெடுத்தார்களா?

இந்திய விமானப்படைத் தளபதி சென்றிருந்த போது, ஸ்ரீ தலதா மாளிகையின் அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அனுமதியின்றி ட்ரோன் (Drone) கமராவைப் பறக்கவிட்டு புகைப்படங்களை எடுத்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் கடந்த 20ஆம் திகதி தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்குச் சென்றிருந்த வேளையில், இவர்கள் கண்டி வாவி சுற்றுவட்டப் பகுதியில் வாவியிலிருந்து குறித்த ட்ரோன் இயந்திரத்தைப் பறக்கவிட்டு அதில் பொருத்தப்பட்டிருந்த கமரா மூலம் புகைப்படங்களை எடுத்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

விமானப்படையின் சமிக்ஞை தடுப்பு (Jammer) இயந்திரத்தைப் பயன்படுத்தி தரையிமிறக்கப்பட்ட இந்த ட்ரோன் இயந்திரத்துடன், அதனைப் பறக்கவிட்ட மூன்று சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் கண்டி, முருத்தலாவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனவும், ஏனைய இருவரும் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button