தேசிய அரசாங்கத்தில் இணைய மாட்டோம்; புதிய ஜனநாயக முன்னணி கூறுகிறது

தேசிய அரசாங்கம் அமையுமாக இருந்தால் அதில் நாங்கள் இணைய மாட்டோம் என்றம், இந்த அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்க நாங்கள் தயாராக இல்லை என்றும் புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
கம்ஹாவில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்கப் போவதில்லை. எவராவது இணையலாம். 159 பேரும் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்றுதான் கூறினர். அவர்களே பார்த்துக்கொள்ளட்டும். அவர்களால் இப்போது முடியாது என்பதனால் எங்களின் தோல்களில் சுமத்தவே முயற்சிக்கின்றனர். ஹர்ஷ டி சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் என்ன செய்யப் போகின்றார் என்று தெரியவில்லை. கடந்த காலங்களில் இவர்களின் கதைகளை கேட்டு 159 ஆசனங்களை மக்கள் வழங்கியுள்ளனர். ஆனால் நாங்கள் அவர்களக்கு முட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றார்.
![]()