அமெரிக்கா – இந்திய உறவில் மீண்டும் கவனம் ஈர்த்த டிரம்ப் உரை

டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) குறித்து பாராட்டுத் தெரிவித்த சம்பவம், டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் Marco Rubio கலந்துகொண்ட நிகழ்வின் போது, அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் 250வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காணொளி வழியாக டொனால்ட் டிரம்ப் நேரலையில் உரையாற்றினார். அப்போது பேசிய டிரம்ப், “எனக்கு பிரதமர் மோடியை மிகவும் பிடிக்கும்.
மோடி சிறந்தவர். அவர் என் நண்பர்” எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர், “பிரதமர் மோடியுடன் பேசுவது ஒரு கௌரவம். நான் அவருடைய தீவிர ரசிகன் என்பதையும் அவரிடம் தெரிவியுங்கள்” என்றும் கூறினார்.
இந்த நிகழ்வில் பிரம்மாண்ட திரையின் முன் நின்றபடி மார்கோ ரூபியோ டிரம்பின் உரையை கவனித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பிரதமர் மோடி விரைவில் வெள்ளை மாளிகைக்கு வருகை தர வேண்டும் என டிரம்ப் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அமெரிக்காவில் ஏற்கனவே சட்டபூர்வமாக வசித்து வரும் பல குடியேறிகள், நிரந்தர குடியுரிமை அல்லது “கிரீன் கார்டு” பெற வெளிநாடுகளில் இருந்து மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனும் புதிய குடியேற்றக் கொள்கை மாற்றம் தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த இந்திய பயணம் இடம்பெற்றுள்ளது.
![]()