உலகம்
பிலிப்பைன்ஸில் இடிந்து விழுந்த 9 மாடி கட்டிடம்; இடிபாடுகளில் சிக்கிய பலர்

பிலிப்பைன்ஸில் 9 மாடி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
பம்பங்கா மாகாணம் ஏஞ்சல்ஸ் நகரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 22 தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
மீட்புப் படையினர் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
![]()