இலங்கை

டக்ளஸ் தேவானந்தா – அசாத் மௌலானா ஆகியோருக்கிடையிலான உறவு! திடுக்கிட வைக்கும் தகவல்கள்….

அசாத் மௌலானாவை கருணா அம்மான் மற்றும் பிள்ளையானுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தி அவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு குறிப்பிட்டது ஈபிடிபி கட்சியின் தலைவரும் முன்னாள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா என தெரியவந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து இயங்கும் சிங்கள புலனாய்வு இணையத்தளம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்.

அசாத் மௌலானா முதன் முதலில் அரசியல் செயற்பாடுகளில் இணைந்து பணியாற்றியது டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆகும்.

டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த அசாத் மௌலானா

அசாத் மௌலானாவின் உண்மையான பெயர் முஹம்மது மிஹ்ரான் முஹம்மது ஹம்ஸீர் ஆகும். அவரது அடையாள அட்டை இலக்கம் 830437379 v என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் 2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உயர் தரத்தில் சித்தியடைந்து குண்டசாலையில் அமைந்துள்ள விவசாய கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்துள்ளார்.

அன்றைய காலகட்டத்தில் விவசாய அமைச்சராகப் பணியாற்றிய ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து அறிமுகமாகிக் கொள்கிறார்.

டக்ளஸ் தேவானந்தா - அசாத் மௌலானா ஆகியோருக்கிடையிலான உறவு! திடுக்கிட வைக்கும் தகவல்கள்.... | Douglas Devananda Pillayan Maulana Gota

இதன் விளைவாக அன்று மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பதவி வகித்த குணசேகரம் சங்கரனின் செயலாளராக டக்ளஸ் தேவானந்தா ஊடாக நியமனம் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் டக்ளஸ் தேவானந்தா இந்த அசாத் மௌலானாவை ஒரு குறிப்பிட்ட கலந்துரையாடலுக்காகத் தனது அலுவலகத்திற்கு அழைத்திருந்தார்.

ஏனெனில் அந்த காலகட்டத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்திருந்த கருணா அம்மானை பகிரங்க அரசியலுக்குக் கொண்டு வருவதற்கான உதவி மற்றும் ஆதரவுகளைப் பெற்றுக்கொள்வதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இக்கலந்துரையாடலில் அவருடன் துயவன் என்ற மற்றுமொரு நபரும் இந்த கலந்துரையாடலில் இணைந்து கொண்டிருந்தார்.

இந்தியாவில் கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பு

அசாத் மௌலானா சிங்களம் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளை மிக நன்றாக எழுதவும் பேசவும் மற்றும் உச்சரிக்கவும் கூடிய திறமை வாய்ந்த ஒருவராவார்.

இதனால் இவரை இந்த ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக டக்ளஸ் தேவானந்தா பயன்படுத்தியிருந்தார்.

எவ்வாறாயினும் இந்த இணைப்பின் ஊடாக அசாத் மௌலானா அதன் பின்னர் கருணா அம்மான் உள்ளிட்ட பிள்ளையான் குழுவிற்குத் தனது முழுமையான பலத்தைப் பயன்படுத்தி உதவிகளை வழங்கியிருந்தார்.

இதற்காக அவருக்குச் சம்பளம் வழங்கியது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே. இதற்கிடையில் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு முன்னர் 2005 செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி அசாத் மௌலானா பிள்ளையான் சரண் உள்ளிட்ட சிலர் இந்தியாவுக்குச் சென்றிருந்தனர். இந்தியாவிலுள்ள கோவளம் பீச் ரிசோர்ட்  ஹோட்டலில் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.

மேலும் கருணா அம்மான் இந்த அசாத் மௌலானா, பிள்ளையான், சரண் உள்ளிட்ட சிலர் இரு சந்தர்ப்பங்களில் கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

மகிந்த ராஜபக்சவை எப்படியாவது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறச் செய்வதற்கும் அந்த வெற்றிக்குத் தேவையான ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்குமே இந்த சந்திப்புக்களின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது.

இந்த சந்திப்பு நடந்த சந்தர்ப்பங்களில் அசாத் மௌலானா தனது உண்மையான பெயரில் தோற்றமளிக்கவில்லை. ‘சுகுந்தன்’ என்ற பெயரிலேயே இந்தியாவுக்கு சென்றுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button