பலதும் பத்தும்

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தும் மர்ம மனித தலைகள்

தென்னிலங்கையில் மற்றுமொரு துண்டிக்கப்பட்ட தலை மீட்கப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முரகல்ல கடற்கரையில், வெட்டப்பட்ட மனித தலைப் பகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பிரதான சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் பின்புறமாக உயிரிழந்த நபர் ஒருவரின் தலைப் பகுதி மாத்திரம் ஒதுங்கியிருந்த நிலையில் அளுத்கம பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்டுள்ள தலைப்பகுதி

 

இன்று காலை அளுத்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே தலைப் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தும் மர்ம மனித தலைகள் | Human Head Found Behind The Hotel

 

இதுவொரு ஆணுக்கு சொந்தமான தலை என அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன், அவரது அடையாளம் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த வாரம் காலியில் வெட்டப்பட்ட தலை ஒன்றின் சிலையின் மீது தொங்க விடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button