உலகம்

கலிபோர்னியா விமான தொழிற்சாலையில் இரசாயன கசிவு; 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்

கலிபோர்னியாவில் உள்ள விமான தொழிற்சாலையில் இரசாயன தொழிற்சாலையில் கசிவு ஏற்பட்டதால் 40ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குர்இத்த தொழிற்சாலையில் 7 ஆயிரம் கேலன் அளவு மொத்தத்தில் மெத்தாகிரிலேட் எனும் இரசாயனம் தொட்டிகளில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. ப்ளாஸ்டிக் தயாரிக்க பயன்படும் இந்த இரசாயனம் எளிதில் ஆவியாகக்கூடியது மற்றும் தீப்பிடிக்கக்கூடியது.

இந்நிலையில் தொட்டிகளில் இருந்து இரசாயனம் கசிய தொடங்கியதனையடுத்து, சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் அனைவரும் வேறு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button