இலங்கை

அநுரவின் நிகழ்வில் தமிழ் எம்.பிக்களுக்கு நேர்ந்த நெருக்கடி.!

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய பொது நூலகக் கட்டிடம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் கடந்த(20) திறந்து வைக்கப்பட்ட நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இந்த நூலகக் கட்டிடத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தமையானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமாரவின் சமூகவலைத்தளப்பக்கங்கள் எதிலும், சுமந்திரன் திரைநீக்கம் செய்யும் எந்த காணொளிகளும் புகைப்படங்களும் பதிவேற்றப்படவில்லை.

மட்டக்களப்பு நூலக நுழைவாயிலில் அனைவரும் ஜனாதிபதியை வரவேற்ற நின்றிருக்கும் போது ஜனாதிபதி அநுர மற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை விட சுமந்திரனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை காணொளிகளில் காணக்கூடியதாக உள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை நிகழ்ச்சி நிரலில் சுமந்திரன் பெயர் இல்லை, மேலும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் வரவேற்கும் போது இவரின் பெயரை உச்சரிக்கவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button