இலங்கை

அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்னர், அவசர தேசிய தீர்வுகளை வகுப்பதற்காக உடனடியாக அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைதல், வாழ்க்கைச் செலவு அதிகரித்தல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரித்தல் ஆகிய விடயங்கள், கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் அவதானம் செலுத்தப்பட வேண்டிய பிரச்சினைகள் என அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button