கவிதைகள்

எழுதுகோல் பாடும் ராகங்கள்…. கவிதை… சி.ரஞ்சிதா

எழுதவென எழுதுகோலோடு
வந்தான் ஒருவன்
கண்ட துயரெல்லாம்
கலை வடிவமாக்கினான்…!

சமூக அக்கறையின்
சின்னம் அவன்…!

கீர்த்திக் கிரீடத்தை
அணிய எண்ணாத
தன்னலமற்றவன் அவன்…!

யார் இவனென
துப்பறிந்த மற்றையவன்
பொங்கி எழுந்தான்…!

எதைக் கண்டு…?
வலிமை மிக்க அவன்
எழுதுகோலின் தரம்
கண்டு…!

பாறையை மோதுகின்ற
கடலலைப் போல
அவன் தீட்டிடும்
படைப்புகளின் வண்ணம்
அழிந்து போக
இவன் எழுதினான்
பதில் கட்டுரைகள்…!

அவனும் இவனும்
எழுதியது எல்லாம்
ஒரு நாள்
ஏடுகளாக மலர்ந்தன…!

உண்மை படைப்பாளன்
அவன்
உலகப் புகழ் வானில்
விடிவெள்ளியாய் மிளிர்ந்தான்;
தலைசிறந்த படைப்பையும்
ஆக்கினான்…!

மற்றையவனோ பொறாமை
என்னும் விமர்சனங்கள்
எழுதி வைத்து
இருள் மாலையைச்
சூடி மறைந்தான்…!

எழுதுகோல் பாடும்
ராகங்கள் பல;
இனிமை தன்னை
சுமந்து நிலைப்பவையோ
சில…!

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button