மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு வெளிப்படுத்திய இரகசியம்!

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நெருக்கடி ஏற்பட்டமை தரவுகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் அதற்குரிய தீர்வுகள் எதனையும் எடுக்காமல் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கப்பட்டிருந்தமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நிதி அமைச்சராக இருந்த மகிந்த ராஜபக்ச இந்தியாவின் ‘தி ஹிந்து’ (The Hindu) நாளிதழுக்கு அளித்த பேட்டியொன்றின் மூலம் இது உறுதியாகியுள்ளது. ‘
‘தி ஹிந்து’க்கு வழங்கிய செவ்வியில்
இலங்கையினால் வெளிநாட்டுப் கடன்களைச் செலுத்த முடியாது எனவும் கடன் மறுசீரமைப்பு மற்றும் அவகாசம் தேவை எனவும் அவர் அந்த நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் அன்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அதற்கான எவ்வித செயற்பாடுகளிலும் அவர் ஈடுபடவில்லை. எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற உடனேயே அரசாங்கத்தின் வரி வருமானத்தை பெருமளவில் குறைத்திருந்தார்.

இதன் விளைவாகவே 2022 ஆம் ஆண்டளவில் அரசாங்கத்தின் வருமானம் வீழ்ச்சியடைந்து வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த முடியாத அளவிற்கு இலங்கையிடமிருந்த வெளிநாட்டு கையிருப்பும் முற்றாக தீர்ந்து போய் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
மகிந்த ராஜபக்ச ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு வெளியிட்ட கருத்துக்களை ஆதாரமாக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் காரசாரமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அன்றே பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
![]()