இலங்கை

அர்ச்சுனா எம்.பி. ஒரு கோமாளி; அரசாங்கம் தெரிவிப்பு

அர்ச்சுனா எம்.பி. ஒரு கோமாளியே. அவரின் கருத்துக்களில் எந்தவிதமான பெறுமதியும் கிடையாது. இதனால் அவரின் கருத்துக்களை அரசாங்கம் கண்டுகொள்வதில்லை என்று பதில் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் வெளியிடும் இனவாத கருத்துக்கள் மற்றும் அவரின் செயற்பாடுகள் தொடர்பாக அவருக்கு எதிராக அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தொடர்பில், தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவிக்கையில்,

அந்த எம்.பி. நடந்துகொள்ளும் முறை, செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் அறிவோம். இதனால் அது தொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை. அதனை எவரும் கணக்கில் எடுப்பதும் கிடையாது. அவர் வெளியிடும் இனவாத கூற்றுகளில் எந்தவித பெறுமதியும் கிடையாது. எதனையாவது கூறுகின்றார். இவ்வாறான கோமாளி கதாபாத்திரங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் குழப்பமடைவதில்லை. மக்களும் குழப்பமடைவது இல்லை என்பதுடன், மக்களும் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் எவரும் அவருக்கு பதிலளிக்கப் போவதுமில்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button