மகிந்தவையும் அழைக்கவில்லை; அமைச்சர் விஜித ஹேரத்

இந்த முறை நடைபெறும் வெற்றி தின தேசியக் கொண்டாட்டத்திற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட எந்தவொரு அரசியல் அதிகார அமைப்பும் அழைக்கப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது .
அமைச்சரவை ஊடக சந்திப்பில் பேசியபோது அமைச்சர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.
போரின் முடிவில் நாட்டை வழிநடத்திய முன்னாள் ஜனாதிபதி இந்த தேசியக் கொண்டாட்டத்திற்கு ஏன் அழைக்கப்படவில்லை என்று ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்தக் கொண்டாட்டத்தில் அரசியல் பிரதிநிதிகளின் பங்கேற்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
அதன்படி, அமைச்சர்கள் மற்றும் அரசியல் அதிகார அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆகியோர் மட்டுமே இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள்.
மேலும், முப்படைகள் மற்றும் பொலிஸாரைச் சேர்ந்த அதிகாரிகள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்பார்கள் என்றும், முன்னாள் நாட்டுத் தலைவர் உட்பட வேறு எந்த வெளி அரசியல் அதிகார அமைப்பும் இந்த நிகழ்விற்கு அழைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
![]()