இலங்கை

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர தடைகள் இல்லை

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உரிமை சகல இனத்தவர்களுக்கும் உள்ளது. அந்த உரிமையை அரசாங்கம் பாதுகாக்கும் என்று பதில் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் யாரும் விரும்பாத யுத்தத்திற்கு நாடு முகம்கொடுத்தது. யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அங்கவீனமானவர்களை நினைவுகூரும் உரிமை அனைத்து இன மக்களுக்கும் உள்ளது. தமது உறவினர்கள், தமது பெற்றோர் மற்றும் தமது பிள்ளைகள் உயிரிழந்திருந்தால் அவர்களை நினைவுகூரும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அதற்கான சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் அனைவருக்கும் வழங்கியுள்ளோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button