உலகம்

ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு ; திட்டமிடப்பட்ட தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

ஈரானுக்கு எதிராக நாளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி (Tamim bin Hamad Al Thani), சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Mohamed bin Zayed Al Nahyan) ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது “Truth Social” சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகவும், தற்போது தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்ற வகையில் ஒரு உடன்படிக்கை எட்டப்படும் என அரபு தலைவர்கள் தெரிவித்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அந்த உடன்படிக்கையின் கீழ் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தாம் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) மற்றும் கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி டேனியல் கெய்ன் (Daniel Caine) உள்ளிட்டோருக்கு தாக்குதலை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதாகவும், ஆனால் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் உடனடி முழு அளவிலான தாக்குதலுக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button