முச்சந்தி
உக்ரைனின் ட்ரோன் போரியல் : ரஷ்யாவை அச்சுறுத்தும் வானாயுதம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(இன்றைய கால போர்களில் வானத்தை யார் கட்டுப் படுத்துகிறார்கள் என்பதற்குப் பதிலாக குறைந்த செலவில் யார் அதிக குழப்பத்தை உருவாக்க முடிகிறது என்பதே முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் டாங்குகள் வரலாற்றை மாற்றியிருந்தால், 21ஆம் நூற்றாண்டில் ட்ரோன்கள் இராணுவ வரலாற்றின புதிய மொழியாக மாறியுள்ளது. இந்த ட்ரோன் போர், பாரம்பரிய போர் முறைகளை மாற்றியமைத்து, குறைந்த செலவில் அதிக சேதத்தை ஏற்படுத்தும் புதிய யுத்தமுறையாக பார்க்கப்படுகிறது)உலகப் போரியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை உருவாக்கிய முக்கிய நிகழ்வாக ட்ரோன்களின் பயன்பாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாரம்பரிய ஆயுதங்களுக்கு மாற்றாக குறைந்த செலவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் போரின் நடைமுறையையே தற்போது மாற்றியமைத்துள்ளன. மேலும் உக்ரேன், ரஷ்யா இரு நாடுகளும் தாக்குதல், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ட்ரோன்களை பரவலாக பயன்படுத்துகின்றன.

ட்ரோன்கள் என்பது மனிதர் இல்லாமல் தொலைவிலிருந்து இயக்கப்படும் விமான கருவிகள் ஆகும். இவை போர்க்களத்தில் எதிரியின் நகர்வுகளை கண்காணிக்க, தகவல் சேகரிக்க, மற்றும் துல்லியமான தாக்குதல்களை நடத்த பயன்படுகின்றன. உக்ரைன் போரில் FPV (First Person View) ட்ரோன்கள் மிகவும் பிரபலமானவை. இவை குறைந்த செலவில் தயாரிக்கப்படுவதுடன், வெடிகுண்டுகளை ஏற்றி எதிரி தாங்கிகள் மற்றும் இராணுவ வாகனங்களை அழிக்க பயன்படுகின்றன.
பாரம்பரியமாக போர்க் களத்தில் டாங்கிகள், ஏவுகணைகள், அணு ஆயுதங்கள் போன்ற பாரம்பரிய இராணுவ வலிமைகளே உலக இராணுவ சக்தியை நிர்ணயித்தன. இன்று அந்த நிலையை மாற்றுவது சிறிய ட்ரோன்களாக மாறியுள்ளது. குறைந்த செலவில், அதிக துல்லியத்துடன், எதிரியின் உள்ளார்ந்த பகுதிகளையே தாக்கக்கூடிய திறன் காரணமாக ட்ரோன்கள் புதிய போர்த் தொழில்நுட்ப புரட்சியாக மாறியுள்ளன.
வலுவிழந்த மாஸ்கோ அணிவகுப்பு:
ஒவ்வொரு ஆண்டும் மே 9 அன்று வெற்றி தின இராணுவ அணிவகுப்பு (Victory Day Parade) ரஷ்யாவின் தேசிய பெருமையின் அரசியல் மேடையாக கொண்டாடப்படுகிறது மாறுகிறது. இரண்டாம் உலகப்போரில் நாசி ஜெர்மனியை தோற்கடித்த “மகத்தான தேசப்பற்று போர்” நினைவாக நடத்தப்படும் இந்த அணிவகுப்பு, சாதாரண இராணுவ நிகழ்ச்சி அல்ல; அது ரஷ்யாவின் உலக அரசியல் அறிவிப்பாகும். ஆனால், 2026இல் இந்த அணிவகுப்பு எளிமையாக நடைபெற்றதற்கு முக்கிய காரணம் உக்ரைனின் ட்ரோன் போர் தந்திரமே.

வழக்கமாக ரஷ்யா, மாஸ்கோவின் சிவப்பு சதுக்கத்தில் தனது பாரம்பரிய இராணுவ வலிமையை உலகிற்கு காட்டும் நிகழ்வு இந்த ஆண்டு சோபை இழந்துள்ளது. தற்போது ரஷ்யாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக
புதிய போரின் முகமாக ட்ரோன் தாக்குதல்கள் உருவாகி உள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதல்கள் தற்போதைய போரின் மையக் கருத்தாக உள்ளது.
உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் வெறும் எல்லைப் பகுதிகளுக்குள் மட்டுப்படவில்லை. ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குகள், ராணுவ விமான தளங்கள், தகவல் தொடர்பு மையங்கள், மற்றும் மாஸ்கோவைச் சுற்றிய பாதுகாப்பு வளையங்களுக்குள்ளும் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதன் மூலம் உக்ரைன் உலகிற்கு ஒரு முக்கியமான செய்தியை அனுப்பியுள்ளது. பாரிய ராணுவம் மட்டுமே ஒரு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யாது. ட்ரோன் தொழில் நுட்பமும் அவசியம் என்பதை ஈரான் போரும், உக்ரைனிய போரும் வெளிப்படையாக அறிவித்துள்ளன.
இந்த வருட மாஸ்கோ வெற்றி அணிவகுப்பின் அரசியல் முக்கியத்துவம் பல கேள்விகளுக்கு இடம் கொடுத்துள்ளது. இந்த அணிவகுப்பு ரஷ்ய மக்களிடம் தேசிய உணர்வை உருவாக்குவதோடு, மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான மனப்போரின் கருவியாகவும் செயல்படுகிறது. ஆனால், அணிவகுப்பு நடைபெறும் நேரங்களில் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்கள் ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் சவாலாக உள்ளதாக கூறப்பட்டது.
இன்றைய கால போர்களில் “ வானத்தை யார்
கட்டுப்படுத்து கிறார்கள்?” என்பதற்குப் பதிலாக “குறைந்த செலவில் யார் அதிக
குழப்பத்தை உருவாக்க முடிகிறது?” என்பதே முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது. குறிப்பாக ட்ரோன்கள் இந்த மாற்றத்தின் அடையாளமாக உள்ளன. இதனால் பாரம்பரிய ராணுவ அணிவகுப்புகள் கூட சில நேரங்களில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
குழப்பத்தை உருவாக்க முடிகிறது?” என்பதே முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது. குறிப்பாக ட்ரோன்கள் இந்த மாற்றத்தின் அடையாளமாக உள்ளன. இதனால் பாரம்பரிய ராணுவ அணிவகுப்புகள் கூட சில நேரங்களில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.மாஸ்கோ வெற்றி அணிவகுப்பு ஒரு நினைவு விழாவைத் தாண்டி, ரஷ்யாவின் அரசியல் உறுதியின் சின்னமாகவும் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மாஸ்கோஙின் பாதுகாப்பு பலவீனங்களை வெளிப்படுத்தி உள்ளது. அதேசமயம் உக்ரைனின் ட்ரோன் போர், எதிர்கால உலகப் போர்கள் எப்படி இருக்கும் என்பதற்கான தெளிவான சான்றாக கருதப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரில் டாங்குகள் வரலாற்றை மாற்றியிருந்தால், 21ஆம் நூற்றாண்டில் ட்ரோன்கள் உலக அரசியலின் புதிய மொழியாக மாறியுள்ளன. மாஸ்கோவின் சிவப்பு சதுக்கத்தில் நடைபெற்ற அணிவகுப்பும், அதற்கு மேல் மிதக்கும் ட்ரோன்களின் நிழலும் — பழைய உலகமும் புதிய போர்த் தொழில்நுட்ப உலகமும் நேருக்கு நேர் மோதும் தருணத்தின் அடையாளமாக இருக்கின்றன.
கமிகாஸி லோய்டரிங் ட்ரோன்:
உக்ரைன் போரில் தற்கொலை (kamikaze) ட்ரோன்கள் பெருமளவில் பயன்படுத்துகின்றன. கமிகாஸி அல்லது “லோய்டரிங்” ட்ரோன்களும் இந்த போரில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணமாக ‘ஷாகிட் 136’ போன்ற ட்ரோன்கள் இலக்கை கண்டறிந்து அதன்மேல் நேரடியாக மோதுவதன் மூலம் தாக்குதல் நடத்துகின்றன. இத்தகைய ட்ரோன்கள் பெரிய ஏவுகணைகளுக்கு மாற்றாக மலிவு விலையிலும் திறமையாகவும் செயல்படுகின்றன.
கடல் பகுதிகளிலும் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கடல் ட்ரோன்கள் மூலம் இருதரப்பின் கடற்படையின் கப்பல்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. இதனால் கடற்படைகளின் பாதுகாப்பு முறைகளும் மாறத் தொடங்கியுள்ளன.

அதேவேளை இந்த போரில் எலெக்ட்ரானிக் போரியல் (Electronic Warfare) என்பதும் முக்கியமானதாக உள்ளது. GPS jam மற்றும் signal spoofing போன்ற முறைகள் மூலம் எதிரி ட்ரோன்களின் கட்டுப்பாட்டை பாதிக்க முயற்சிக்கின்றனர். எனவே ட்ரோன் போர் என்பது வெறும் ஆயுதப் போராக மட்டும் இல்லாமல், தொழில்நுட்ப மற்றும் தகவல் போராட்டமாகவும் மாறியுள்ளது.
உக்ரைன் ட்ரோன் போர் உலக இராணுவ வரலாற்றில் புதிய காலத்தைத் தொடங்கியுள்ளது. மலிவு விலை, துல்லியமான தாக்குதல் திறன், மற்றும் வேகமான செயல்பாடு காரணமாக ட்ரோன்கள் எதிர்காலப் போர்களில் முக்கிய ஆயுதமாக இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது.

அதிக சேதத்தை ஏற்படுத்தும் புதிய ட்ரோன் யுத்தமுறையை தடுக்க
மின்காந்த தடுப்பு மூலம் (Electronic Warfare) ட்ரோன்களை திசைதிருப்ப அல்லது செயலிழக்கச் செய்ய jammer தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஈரான் உருவாக்கிய Shahed வகை ட்ரோன்களை மொஸ்கோ பயன்படுத்துவது அதிகம் என்று கூறப்படுகிறது. அதே சமயம் கீவ் அரசு உள்நாட்டு மற்றும் மேற்கு நாடுகள் வழங்கும் ட்ரோன்களை பயன்படுத்துகிறது.
ஆனாலும் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் ட்ரோன் போர் தொழில் நுட்பமும் அதீத வளர்ச்சி அடைந்துள்ளது. இன்றைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி போர் முறைகளிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போரில் ட்ரோன்களின் பயன்பாடு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. மனிதர்கள் நேரடியாக போர்க்களத்தில் ஈடுபடாமல், இயந்திரங்களின் மூலம் தாக்குதல் நடத்தும் புதிய யுத்தமுறையாக இது வளர்ந்து வருகிறது.
![]()