பலதும் பத்தும்

சுவர்களில் செங்கக்கற்களுக்கு இடையில் தங்கப் புதையல்

சுவர்களில் செங்கக்கற்களுக்குள் இடையில் தங்கப் புதையல் மீட்கப்பட்ட சம்பவமொன்று பெல்ஜியத்தில் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர், அந்த நகரில் புதுப்பிப்புப் பணி தங்கத் தேடலாக மாறியது.

ஊழியர்கள் அறநிறுவனக் கட்டடம் ஒன்றில் வடிகால் செயல்முறையை அமைக்கவேண்டிருந்தது. இதன் போது சுவர்களை இடிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் செங்கற்களுக்குள் இருந்தது தங்கப் புதையல் கிடைத்துள்ளது. அதில் 50 தங்கக் கட்டிகளும், தங்கக் காசுகளும் இருந்தன.

தங்கத்தைக் கண்ட ஊழியர்களால் தங்களின் கண்களை நம்பமுடியவில்லை. காவல்துறைக்குத் தகவல் அனுப்பினர். அதிகாரிகள் உடனடியாகத் தங்கத்தை மீட்டு, பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்தனர். தங்கத்தின் சொந்தக்காரர் யார் என்று தெரியவில்லை.

அதை உரியவரிடம் கொண்டுசேர்க்க விரும்புவதாக அதிகாரிகள் கூறினர். கட்டுமானத் தளத்தில் இன்னும் புதையல் இருக்கலாம் என்று சிலர் எண்ணுகின்றனர். பொதுமக்கள் அங்கிருந்து விலகியிருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்தனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button