இலங்கை

சிறீதரன் மீதான குற்றச்சாட்டுகள்; விசாரிக்க விசாரணைக் குழு

இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்மாவட்ட எம்.பி.சிவஞானம் சிறீதரன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக கட்சியினால் மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் பொது செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்

வவுனியாவிலுள்ள தழிழரசுக் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்தியகுழுக் கூட்டத்தில் இந்த குழுவை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறுகையில்,

கட்சிக்குள்ளே எடுக்கப்பட்ட தீர்மானமாக இருந்தாலும் அத்தீர்மானம் உரியமுறையில் அறிவிக்கப்படாவிட்டால் அது திரிபு படுத்தக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. எனவே அதனை உத்தியோக பூர்வமாக கட்சி எடுத்த தீர்மானத்தை அறிவிப்பதற்கு கடமைப்பட்டுள்ளேன்.

கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்ற போது, சிறீதரன் எம்.பி.தொடர்பில் கடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் வாசிக்கப்பட்ட போது, அது தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. எமது கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர் அரசியல் அமைப்பு பேரவையில் அரசாங்கத்திற்கு சாதகமாக செயற்ப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அது தொடர்பாக அவருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தோம்.

எனவே அந்த பதவியிலிருந்து கட்சியையும் சங்கடப்படுத்தாமல், அவரும் சங்கடப்படாமல் ராஜினாமா செய்யுமாறு கட்சியின் அரசியல் குழு கடிதம் அனுபியிருந்தது.அதில் அவர் இணங்காத காரணத்தினால் பாராளுமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து அவர் இறக்கப்பட்டார். அது அனைவருக்கும் தெரிந்த விடயம். இன்றைய கூட்டத்திலும் அந்த விடயம் பேசப்பட்டு இறுதியில் சுமூகமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் அதற்கு இணங்கி இந்த தீர்மானத்தை நிறை வேற்றியிருக்கிறோம்.

இதன்போது இந்த விடயம் தொடர்பில் விசாரணை குழுவொன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கட்சியின் தலைவர் சீ.வி.கே சிவஞானம், நிர்வாக செயலாளர் சேவியர் குலநாயகம். இணை பொருளாளர் கமலேஸ்வரன் ஆகியோரை உள்ளடக்கிய விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டதுடன், இவர்கள் சிறீதரன் எம்.பியை சந்தித்து விசாரணைகளை நடத்துவர் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button