முச்சந்தி
நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவ பத்திரிகை யாழ் மாநகர சபையிடம் கையளிப்பு

நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவ பத்திரிகையும் காளாஞ்சியும் தேவஸ்தானத்தால் சம்பிரதாயபூர்வமாக யாழ் மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டது.
வரலாற்றுப்பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி பெருங்கோவில் வருடாந்த மகோற்சவபெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்துக்கு வெளிச்சுற்றாடல் செயற்பாடுகளை காத்திரமாக முன்னேடுக்கும் யாழ் மாநகரசபைக்கு மகோற்சவ பத்திரிகையும் காளாஞ்சியும் தேவஸ்தானத்தால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, யாழ் மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் உள்ளிட்டோர் மகோற்சவ பத்திரிகையையும் காளாஞ்சியையும் பெற்றுக்கொண்டனர்.இந்த நிகழ்வையோட்டி யாழ் மாநகரசபை வாழை, தோரணங்களால் அலங்கரிக்கபட்டிருந்தது.
![]()