இந்தியா

விஜய் அரசு இதனை நிச்சயம் எதிர்க்க வேண்டும் – கனிமொழி வலியுறுத்து!

மத்திய பாஜக அரசின் மொழித் திணிப்பை முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கனிமொழி எம்.பி. இன்று மே 17 ஆம் திகதி செய்தியாளர்களர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

அது தொடர்பில் கனிமொழி மேலும் பேசுகையில், திராவிட முன்னேற்றக் கழகம் நாங்க ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுதும் சரி, இப்பொழுதும் சரி, மும்மொழிக் கொள்கை திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்.

புதிதாகப் பதவியேற்றுக் கொண்டிருக்கக்கூடிய அரசாங்கமும் இதை நிச்சயமாக, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, எதிர்க்க வேண்டும். நிச்சயமாக எந்தவித மொழித் திணிப்பையும் தமிழ்நாட்டிலே ஏற்றுக்கொள்ள முடியாது என கனிமொழி எம்.பி. கறாராக தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button