உலகம்

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வீடு மீது மோதிய விமானம்; சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இருவர்

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் உள்ள அக்ரான் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை சுமார் 4 மணியளவில் புறப்பட்ட அந்த விமானத்தில் இரண்டு பேர் பயணித்திருந்தனர்.

விமான நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அக்ரான் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குப் பிறகு விமானம் தீப்பற்றி எரிந்ததாகவும், இதில் விமானத்தில் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button