கனடாவில் பயங்கரம் ; 2 வயது மகளைக் கொலை செய்த தாய் கைது

கனடாவின் ஸ்கார்பாரோ பகுதியில், தனது இரண்டு வயது கூட நிரம்பாத பெண் குழந்தையைக் கொலை செய்ததாக அவரது தாயார் மீது பொலிஸார் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில், மிட்லாண்ட் அவென்யூ மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை மயக்க நிலையில் இருப்பதாக போலீஸாருக்கு 911 அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அன்று குழந்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உயிரிழந்த குழந்தை ஓரியானா சோ என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வியாழக்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை இந்த ஆண்டின் ஸ்கார்பாரோ பகுதியில் பதிவான 8-வது கொலைச் சம்பவமாகும். அடுத்த சில நாட்களுக்கு அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு மற்றும் விசாரணை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நலன் கருதி கூடுதல் விபரங்களை வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர்.
![]()