இலங்கை

ஜனாதிபதிக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் நீதிமன்றங்களின் சுயாதீனத்தன்மைக்கு ஜனாதிபதியினால் கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டு ஆவணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 24 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

சர்வதேச தொழிலாளர் தினமான மே 1ம் திகதி ஜனாதிபதியினால் பகிரங்கமாக கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற செயற்பாடுகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த கூற்றின் மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஒப்படைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலங்களில் பதவி வகித்த முக்கியஸ்தர்களுக்கு எப்போது தண்டனை விதிக்கப்படும் என்பது குறித்த விபரங்களை வெளியிடும் வகையில் ஜனாதிபதி அநுர மே தினக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button