உலகம்

தாய்லாந்து முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ரா விடுவிப்பு

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ரா (76), ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

2006-இல் ஆட்சியிழந்த பின்னா் வெளிநாட்டில் தஞ்சமடைந்த இவா், கடந்த 2023-இல் நாடு திரும்பினாா். முதலில், இவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னா், அரசரின் கருணை அடிப்படையில் அது ஓராண்டாகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது நன்னடத்தை, வயது மூப்பு காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளாா்.

தக்சின் ஷினவத்ரா விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சிறைவளாகத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளா்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button