முச்சந்தி

மக்களாட்சி அமையுமென்று நம்பிக்கை, வித்யாசாகர், குவைத்!!

முதலமைச்சரின் (10.05.2026 ) பதவியேற்பு விழா உரை குறித்து!!

மிகச் சிறப்பான பேச்சு. கோட்சூட் போட்ட அழகான முதல்வர். எழுச்சியுற்ற குரலின் கம்பீரமான பதவியேற்பு விழா. உணர்ச்சிமிகுந்த உண்மைக்கும் நேர்மைக்கும் ஏதுவான ஒரு முதலமைச்சரின் வருகையாக அமைந்தது இன்றைய பதிவியேற்பு நிகழ்வு.

1 பெண்களின் பாதுகாப்பு
2 போதை ஒழிப்பு
3 சிறார் கல்வி உயர்வு

மற்றும் அடிப்படை நலன்களை கருத்தில் கொண்டதில், நேர்மையான அரசியலை முன்வைக்க முனைந்ததில் மகிழ்ச்சி.

எளிய மக்களின் தலைவனாக வாக்குறுதி அளித்ததும், எவரையும் தவறுசெய்ய விடமாட்டேன், ஒரு காசு கூட அரசிலிருந்து தொடமாட்டேன், இது நமது ஆட்சி என்று சொன்ன சகோதரத்துவ உரையும் நமக்கின்று பெருமைக்குரிய முதல்வரை எடுத்துக்காட்டியது.

சற்று வெள்ளித் திரையில் கண்டதைப் போலவே தெரிந்தாலும் முகத்தில் முழுக்க முழுக்க உண்மை இருந்தது. மக்களின் மீதான அக்கறை உண்மைக்குரலில் வெளிப்பட்டது. முதல்வர் பேசிய முழுப் பேச்சும் மனத்திலிருந்து வந்ததை எவரும் மறுப்பதற்கேயில்லை.

குறிப்பாக,
நாம் தான் இனி, நடிகனெனும் மயக்கத்தில் அவரைச் சார்ந்திராமல், வெறுப்பில் ஒதுங்கியிராமல்; தமிழகத்தின் முதல்வரெனும் பெருமதிப்போடு கண்டு போற்றி உயர்த்தி உடன் நிற்றல் மண்ணுக்குப் பெருமையைச் சேர்க்கும். மக்களுக்கு நலத்தைப் பயக்கும்.

நம்மோடிருந்த ஒரு சாமானியன் இன்று எட்டுகோடித் தமிழரின் முதல்வராக உயர்ந்துள்ளார். தனது திறமையாலும் நம்பிக்கையாலும் உழைப்பாலும் உயர்ந்துள்ளார். படிப்பு காதல் விளாயாட்டு என்றிருந்த இளைஞர்களையும் இளைஞிகளையும் தனது மேலிருந்து அன்பால் ஈர்ப்பால் கவர்ந்து, திறன்வழிப் பயனாக அரசியலை நாடச்செய்து 80% மக்களையும் ஓட்டிடவைத்து, இன்று எல்லோரின் அரசாக “தமிழக வெற்றிக் கழகத்தின் அரசை” மாற்றியிருப்பதும், இத்தமிழகத்தை அதன் சீரோடு ஆண்டு; இயன்றவாறு உயர்த்தி; அனைத்துத் தரப்பு மக்களையும் காப்பதற்கு போராடுவேனென்று முழக்கமிட்டிருப்பதும் எல்லோருக்குமே நம்பிக்கையை தருகிறது.

இது தான் மக்கள். இது தான் வாழ்வு. இது தான் நம் நாடு. இதுவும் தான் அரசியல்.
நம்பிக்கை தானே வாழ்க்கை; நம்புவோம். உடன் நிற்ப்போம். வாழ்க சனநாயகம். வெல்க புதிய அரசு.

முதலமைச்சர் மாண்புமிகு திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்து

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button