உலகம்
பாகிஸ்தானில் சோதனைச் சாவடி மீது கார் வெடிகுண்டு தாக்குதல்: 12க்கும் மேற்பட்டோர் பலி

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே அமைந்துள்ள ஒரு பொலிஸ் சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தேடுதல் வேட்டை
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று அந்த சோதனைச் சாவடி மீது மோதி வெடித்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்த சக்திவாய்ந்த வெடிப்பினால் அந்த பொலிஸ் சோதனைச் சாவடி கட்டிடம் முழுமையாகத் தகர்ந்து இடிபாடுகளாக மாறியுள்ளது. சம்பவ இடத்தில் வாகனங்கள் உருக்குலைந்து சிதறின.
இந்தத் தாக்குதல் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
![]()