உலகம்

சீன பட்டாசு ஆலை வெடிவிபத்து ; பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகரின் லியுயாங் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 4ஆம் திகதி மாலை 4:43 மணியளவில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பின் தாக்கம் சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உணரப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

சீன பட்டாசு ஆலை வெடிவிபத்து ; பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு | Chinese Fireworks Factory Explosion Death Toll 37

ஆரம்ப தகவல்களில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 61 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடிவிபத்து நடந்த இடத்திற்கு அருகில் வெடிமருந்து கிடங்குகள் இருந்ததால், முன்னெச்சரிக்கையாக அப்பகுதி மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கூறி தொழிற்சாலை நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், வெடிவிபத்துக்குப் பின் காணாமல் போன ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button