System Changeஐ எதிர்பார்த்த மக்கள் – ஜனாதிபதியை தவிர 159 பேர் என்ன செய்கிறார்கள்..!

அநுர அரசாங்கத்தின் மீது எதிர்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
எதிர்கட்சியினரும் அவர்களின் ஆதரவாளர்களும் அவர்களுடைய சமூகவலைத்தளப்பக்கங்களினூடாகவே இவ்வாறு தங்களளது கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
எனவே அரசதரப்பு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் என்ன செய்கின்றன என்ற கேள்வியும் எழுகின்றது.
2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்றது. 2024 நவம்பர் 14ஆம் திகதி இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றது.
இந்த இரண்டு தேர்தல்களிலும் மாறி மாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்களை துரத்தியடித்து மாற்றத்தை நாடி தேசிய மக்கள் சக்தியினருக்கு மக்கள் ஆட்சியளித்தார்கள்.
ஆனால் தற்போது மக்கள் நினைத்த System change நடக்கின்றதா என்ற கேள்வியெழுந்தது.
இந்த இரண்டு வருடத்தில் ஆளுங்கட்சியினர் என்ன செய்தார்கள் என்ற கேள்வியெழுந்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமர திசாநாயக்கவை தவிர மற்றவர்கள் உள்ளார்களா என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர்.
![]()