இந்தியா

அ.தி.மு.க. ஆட்சி அமைக்க தி.மு.க. ஆதரவு?

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்த்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்து 108 இடங்களில் வென்ற நிலையில் தி.மு.க. தனித்து 59 துகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்து 47 தொகுதிகளிலும் வென்றுள்ளன. கூட்டனியாக தி.மு.க. 73 துகுதிகளிலும் அ.தி.மு.க. 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

த.வெ.க., தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் தனிப்பெரும் கட்சியாக வென்ற த.வெ.க. ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அக்கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தந்துள்ள நிலையில் தற்போது த.வெ.க.விற்க்கு 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.

மேலும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வில் இருக்கும் கூட்டனி கட்சிகளில் சில விஜயின் த.வெ.க.விற்கு ஆதரவு தெரிவித்தால் அக்கட்சி ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழலில் யாருமே எதிர்பாராத வகையில் தமிழக அரசியல் வரலாற்றிலேயே திருப்பு முனையாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்காமல் தடுப்பதற்காக இரண்டு திராவிட கட்சிகளும் கைகோற்க உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தி.மு.கவின் 59 இடங்களையும் அ.தி.மு.க.வின் 47 இடங்களையும் சேர்த்தால் 106 இடங்கள் கிடைக்கும். அத்துடன் தி.மு.க. கூட்டனியில் உள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லிக் ஆகியவை (1:49) தலா இரண்டு இடங்களையும் தே.மூ.தி.க. ஒரு இடத்தையும் வைத்துள்ளன.

அ.தி.மு.க. கூட்டனியில் பா.ஜ.க.வை தவிர்த்து பா.ம.க. நான்கு இடங்களையும் அ.ம.மு.க. ஒரு இடத்தையும் தங்கள் வசம் வைத்துள்ளன. இந்த எண்ணிக்கைகளை கூட்டினால் பெரும்பான்மைக்கான 118 இடங்களைத் தாண்டி கூடுதலாக இரண்டுடன் 120 இடங்கள் உள்ளன. இந்த சூழலில் தி.மு.க. ஆதரவுடன் ஆட்சியமைக்க அ.தி.மு.க. தீவரம் காட்டி வருவதாகும் இரு கட்சிகளின் உயர்மட்டத்திலும் இதற்கு ஓப்புதல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வெளியில் இருந்து ஆதரவு அளிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகும் சொல்லப்படுகிறது.

ஆனால் இச்சம்பவம் குறித்து இரண்டு திராவிட கட்சிகளும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில் இது நிஜமானால் தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button